2014ஆம் ஆண்டில் முதல் ஆறு மாத காலத்தில் நாடு முழுவதிலும் 13,556 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 60.57 வீதமானவர்கள் மேல்மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. 2014ஆம் ஆண்டின் 22வது வாரத்திலேயே அதிகள வானவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 5184 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜூன் மாதம் இதுவரை 819 டெங்கு நோய் தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் கொழும்பு மாவட்டத்தில் 452 டெங்கு தொற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 92 டெங்கு
தொற்றுநோயாளர்களும், ஏனைய பகுதிகளில் 360 டெங்கு தொற்று நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களில் கொழும்பு மாவட்டத்தில் அதிகூடுதலான டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. 1675 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதா அமைச்சின் தொற்றுநோய் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
டெங்குநோய் தடுப்புப் பணிகளில் கொழும்பு மாநகரசபை, தெஹிவளை மற்றும் கல்கிஸ்சை மாநகரசபை ஈடுபட்டுள்ளன. நீர் தோங்கிநிற்கும் பகுதிகளை துப்புரவாக்கும் பணிகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக