வவுனியா கரப்பன்காடு அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோவிலில் நாளையதினம் (13.06) குரு மாற்ற சிறப்பு வழிபாடு நடைபெற இருப்பதாக பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.
நிகழும் மங்கள கரமான ஜய வருடம் வைகாசி மாதம் 30ம் நாள் 13.06.2014 வெள்ளிக்கிழமை மாலை 05 மணி 39 நிமிடமளவில் குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கற்கடக ராசிக்குள் பிரவேசிக்கின்றார்.
இதனை முன்னிட்டு 13.06.2014 மாலை 4.00 மணிக்கு தட்சணா மூர்த்தி பகவானுக்கு 108 சங்காபிஷேகம், விசேட ஹோமம், பூசை வழிபாடுகள் நடைபெற்று ,விபூதி பிரசாதம் வழங்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக