வியாழன், 12 ஜூன், 2014

மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வ/வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று (12.06) நடைபெற்றது.

'பூர்வீகம் செய்திகளுக்காக வன்னியன்'

மகிந்தோதய திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி தொழில் நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கல்லூரி அதிபர் திரு.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது.

அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக பாடசாலையின் பழைய மாணவனும் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான கௌரவ. முருகேசு சந்திரகுமார்  அவர்கள் கலந்து கொண்டார்.

சிறப்பு  விருந்தினர்களாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் இணைப்பாளருமான கௌரவ. சிவநாதன் கிஷோர்,  பிரதிக் கல்விப்பணிப்பாளர் திரு.தவரட்ணம், பாடசாலையின் அபிவிருத்தி சங்க செயலாளரும் வடக்கு வலய ஆசிரியர் நிலைய முகாமையாளரும் திரு.ஜெயச்சந்திரன், ஈழமக்கள் ஜனனாயக கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ் சிவகுமார் (ரகு), பாடசாலையின் பழைய மாணவர் சங்க  செயலாலரும் விளையாட்டு உத்தியோகத்தர் திரு.அமலன் ஆகியோரும் கல்வித்திணைக்கள அதிகாரிகள்,
ஆசிரியர்கள் ,பாடசாலை மாணவர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

அடிக்கல் நாட்டு விழாவை தொடர்ந்து பாடசாலையின் ஐயாத்துரை மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்று விருந்தினர்களுக்கான மதியபோசனை நடைபெற்றது.

இதேவேளை, மகிந்தோதய திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் மகிந்தோதய தொழில் நுட்பபீடம் அமைக்கப்பட்டு வரு கின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக