செவ்வாய், 17 ஜூன், 2014

வாக்களித்ததற்கு தண்டனையாக ஆப்கானில் 11பேரது விரல்கள் தலிபான்களால் துண்டிப்பு...!!!!

ஆப்கான் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த தற்காக 11 பேரது விரல்களை தலிபான்கள் துண்டித்துள்ளனர்.

மேற்கு ஹரத் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தலை அடுத்து இந்த கொ^ர தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தேர்தலுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஆப்கானில் மொத்தம் 47 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானில் முன்னாள் அமைச்சர்களான அப்துல்லாஹ் அப்துல்லாஹ் மற்றும் அ'ரப் கானி அஹ்மத்சாய் ஆகியோர் போட்டியிட்ட இரண்டாவது சுற்று ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு தலிபான்கள் பொதுமக்களை எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில் ஹரத் மாகாணத்தில் வாக்களித் தோரை சோதனையிட்டிருக்கும் தலிபான்கள் வாக்களிப்பில் பங்கேற்ற 11 பேரின்; விரல்களை துண்டித்துள்ளனர். வாக்களித்ததற்காக இடப்படும் மை அடையாளம் இருக்கும் விரல்களே துண்டிக்கப்பட்டுள்ளன.


ஆப்கான் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் ஜ_லை மாதம் 22 ஆம் திகதியே வெளியிடப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக