சனி, 17 மே, 2014

நரேந்திர மோடிக்கு ஒபாமா வாழ்த்து.. தொலைபேசியில் பேசினார்!!


பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா டெலிபோன் மூலம், பிரதமராக பொறுப்பேற்க இருக்கும் நரேந்திர மோடியுடன் நேற்று இரவு பேசினார். அப்போது அவர், இந்திய மக்களின் தெளிவான உறுதியான முடிவில் கிடைத்த வெற்றிக்காக மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்தியா–அமெரிக்கா கூட்டு வர்த்தகம் மற்றும் உலக பொருளாதார நிலை பற்றியும் இருவரும் பேசினார்கள்.

மேலும் நரேந்திர மோடியை அமெரிக்காவுக்கு வருமாறு ஒபாமா அரசு அழைப்பும் விடுத்துள்ளது. கடந்த 2005–ம் ஆண்டு குஜராத் கலவரத்தை
தொடர்ந்து மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக