சனி, 17 மே, 2014

சூடானில் மதம் மாறிய பெண்ணுக்கு மரண தண்டனை விதிப்பு!!


சூடானைச் சேர்ந்தவர் மரியம் யாக்யா இப்ராகிம். 27 வயது பெண்ணான இவர், திருமணம் செய்வதற்காக இஸ்லாமிய மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். சூடான் நாட்டு வழக்கப்படி இஸ்லாமிய மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாறக்கூடாது. இதனையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, அவர் மீண்டும் இஸ்லாமிய மதத்திற்கு மாறுவதற்கு கால அவகாசம் வழங்கினார். ஆனால் இதனை மறுத்த மரியம், ‘நான் ஒரு கிறிஸ்தவ பெண்’
என்று கூறி மதம் மாற மறுத்து விட்டார். இதனையடுத்து அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இந்த தீர்ப்பை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட மக்கள் கோர்ட்டு வளாகத்தின் முன்பு கூடி, மதத்திற்கு சுதந்திரம் வேண்டும் என்று கோஷமிட்டனர். இதற்கிடையே சில இஸ்லாமிய அமைப்புகள் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக