வெள்ளி, 2 மே, 2014

மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் மேதின நிகழ்வு இன்று வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றன.

இன்று காலை மட்டக்களப்பு மண்கூண்டு கோபுரத்தில் இருந்து நிகழ்வு நடைபெற்ற சார்ள்ஸ் மண்டபம் வரையில் தொழிலாளர்கள் உரிமையை பாதுகாப்போம் என்னும் கோசத்துடன் மாபெரும் பேரணி நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தலைமையில் மேதினக் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், பிரசன்னா, கோ.கருணாகரம், நடராஜா, ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை), 

துரைராஜசிங்கம், அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், ஆகியோரும் மாவட்டத்தின் இளைஞர் அணித்தலைவர்கள், செயலாளர்கள் வர்த்தக பிரமுகர்கள் பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களின் சிறப்புரைகளும் இடம்பெற்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக