வெள்ளி, 2 மே, 2014

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தினம்!!

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தின பேரணியும் மே தின கூட்டமும் இன்று ஹட்டன் நகரில் இடம்பெற்றது. 

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தின கூட்டம் ஹட்டன் பஸ்தரிப்பு நிலைய பகுதியில் காலை  ஆரம்பமாகியது. 
இந்த மே தின கூட்டத்திற்கு முன்பதாக ஹட்டன் மல்லியப் பூ சந்தியிலிருந்து மே தின பேரணியும் நடைபெற்றது.

மலையக தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் இந்த மே தினம் நடைபெற்றது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், 

சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பி.,ராஜதுரை மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சிங்பொன்னையா, சோ.ஸ்ரீதரன், திருமதி. சரஸ்வதி சிவகுரு, பொதுச்செயலாளர் எஸ்.பிலிப், நிதிச்செயலாளர் எஸ். செபஸ்டியன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 
இந்த மே தின கூட்டத்தில் பல மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக