வெள்ளி, 2 மே, 2014

கிளிநொச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எழுச்சிமிகு மே நாள் நிகழ்வு!!




தமிழ் தேசிய மே நாளின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான எழுச்சி நிகழ்வு கிளிநொச்சி அக்கராயன் ஸ்கந்தபுரம் பிரதேசசபை வளாகத்தில் பிரதேசசபை உறுப்பினர் தயாபரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

முன்னதாக உழைப்பால் ஒன்றிணைவோம் எம்மண்ணில் நிலைபெறுவோம் என்ற மகுடத்தின் கீழ் அக்கராயன் இத்தியடி அம்மன் ஆலய முன்றலில் இருந்து ஊர்திகள் சகிதம் ஆரம்பமான மேநாள் நிகழ்வில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா விவசாய அமைச்சர்
ஜங்கரநேசன் வடமாகாணசபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை அரியரத்தினம் மற்றும் பிரதேசசபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் பெண்கள் அமைப்புக்களின் உறுப்பினர்கள் விவசாய பெருமக்கள் என திரளாக கலந்துகொண்டனர்.
பின்னர் மேநாள் மேடையில் மக்கள் பிரதிநிதிகள் பலரும் சிறிப்புரைகளை ஆற்றியிருந்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக