செவ்வாய், 20 மே, 2014

இரத்தினபுரியில் டெங்கு நோய் பரவும் அபாயம்!!

இரத்தினபுரி நகர சபை பகுதியில் டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதாக இரத்தினபுரி மாநகரசபையின் ஐ.ம.சு.கூட்டணி உறுப்பினர் மொஹமட் ஷியாம் தெரிவித்தார்.

இரத்தினபுரி நகரிலுள்ள 5 பாடசாலைகளில் டெங்கு அபாயம் காணப்படுவதுடன் இதில் ஒரு பாடசாலையில் 15இற்கு மேற்பட்ட மாணவர்களும் அப்பாடசாலையின் அதிபரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை
பெற்று வருகின்றனர்.

இரத்தினபுரியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் முற்றாக ஒழிக்க முடியவில்லையென பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக