சனி, 17 மே, 2014

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரஷிய ராக்கெட் நடுவானில் வெடித்து சிதறியது!!

தொலைத்தொடர்பு துறையில் ஆய்வுப்பணிகளுக்காக நவீன செயற்கைக்கோள் (தி எக்ஸ்பிரஸ்–ஏ.எம்.4ஆர்) ஒன்றை ரஷியா வடிவமைத்தது. இந்த செயற்கைக்கோளை புரோட்டான்–எம் என்ற ராக்கெட் மூலம் நேற்று விண்ணுக்கு அனுப்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

அதன்படி, கஜகஸ்தானில் உள்ள பைக்கானூர் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 1.42 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்பட்டது. ஆனால் ராக்கெட் கிளம்பிய 9–வது
நிமிடத்தில், அதன் 3–வது பகுதியில் கோளாறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த ராக்கெட் நடுவானில் சுமார் 150 கிலோமீட்டர் உயரத்தில் வெடித்து சிதறியது.

இதில் செயற்கைக்கோள் பாகங்கள் பசிபிக் பெருங்கடல் அல்லது சைபீரியா பகுதியில் விழுந்திருக்கலாம் என ரஷிய தொலைக்காட்சி ஒன்று அறிவித்துள்ளது. எனினும் ராக்கெட்டின் பாகங்கள் விழுந்து உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக