வெள்ளி, 2 மே, 2014

ஐக்கிய தொழிலாளர் மேதினப் பேரணி கட்டுநாயக்காவில்!!

அனைத்துவிதமான அடக்கமுறைகளுக்கும் எதிரான ஐக்கிய தொழிலாளர் மேதினப் பேரணி என்ற தொனிப் பொருளில் பல்வேறு தொழிற் சங்கங்களும் சிவில் அமைப்புக்களும் இணைந்து நடத்திய மேதின பேரணி கட்டுநாயக்கவில் இடம்பெற்றது.

கட்டுநாயக்கா - கொழும்பு பிரதான வீதியில் முற்பகல் 9 மணிக்கு
ஆரம்பமான பேரணி கட்டுநாயக்க பொலிஸ் நிலையம் முன்பாகவுள்ள மணிக்கூட்டு கோபுரம் அருகில் இடம்பெற்ற கூட்டத்துடன்நிறைவு பெற்றது.

சுதந்திர வரத்தக வலய ஒத்துழைப்பு அமைப்பு, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், ஸ்ரீ விமுக்தி மீனவ பெண்கள் அமைப்பு, முன்னேற்றச் சங்கம், பெண்கள் மத்தியஸ்தானம், ரைட்டு லைப் மனித உரிமைகள் அமைப்பு உட்பட பல்வேறு தொழிற் சங்கங்களும் சிவில் அமைப்புக்களும் இணைந்து இந்த மேதின ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தன.
பல நூற்றுக் கணகானோர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டு தமது உரிமைகளுக்காகவும் அனைத்து விதமான அடக்கமுறைகளுக்கும் எதிராகவும் குரல் கொடுத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக