அரசாங்கத்தின் உத்தரவின் பேரிலேயே சுதந்திர வரத்தக வலய ஊழியர் ரொசேன் சானக்க பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மனித உரிமை செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்னாந்து தெரிவித்தார்.
அரசாங்கத்தின் தனியார் உத்தேச ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2011 ஆம் ஆண்டு ஜுன் மாதம் கட்டுநாயக்க சுதந்திர வரத்தக வலய ஊழியர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சுதந்திர வரத்தக வலய ஊழியர் ரொசேன் சானக்கவை நினைவு கூர்ந்து இன்று முற்பகல் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மணிக்கூட்டு கோபுரம் அருகில் நினைவு தின உரையும் மலரஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.மனித உரிமை அமைப்புக்கள், சுதந்திர வரத்தக வலய ஒத்துழைப்பு அமைப்பு உட்பட பல்வேறு சிவில் அமைப்புக்களை சேர்ந்தவர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
இங்கு உரையாற்றிய மனித உரிமை செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்னாந்து , அரசாங்கம் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு ஆட்சி புரிகிறது. அரசாங்கத்தின் உத்தரவின் பேரிலேயே சுதந்திர வரத்தக வலய ஊழியர் ரொசேன் சானக்க பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக