வெள்ளி, 2 மே, 2014

தாய்லாந்தில் ஜுலை 2இல் தேர்தல்!!

தாய்லாந்தில் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி நடைபெற்ற தேர்தலை செல்லுபடியற்றதென்று அரசியலமைப்பு நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து, அங்கு புதிததாக தேர்தலை நடத்தவுள்ளதாக தாய்லாந்து அறிவித்துள்ளது. 

இந்நிலையில், புதிய தேர்தல் எதிர்வரும் ஜுலை மாதம் நடத்துவதற்கான  உடன்பாடு தேர்தல் ஆணையகம் மற்றும் பிரதமருக்கு இடையில் எட்டப்பட்டுள்ளதாக அந்த நாட்டு
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் கடந்த பெப்ரவரி மாதம் திடீர் தேர்தலுக்கு பிரதமர் ஜிங்லுக் சினவத்ரா விடுத்திருந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.  

நடந்துமுடிந்த தேர்தலில் இவரது ஆளும் கட்சி வெற்றி பெறுமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் இத்தேர்தலை பகிஷ்கரித்தன. 
ஆர்ப்பாட்டக்காரர்கள் வாக்களிப்புக்கு இடையூறு ஏற்படுத்தினர். இதனால், தேர்தல் முழுமையாக நிறைவடையவில்லை. வாக்களிப்பு அரசியலமைப்புக்கு மாறானது எனவும் ஏனெனில், தேர்தல் நாடு முழுவதிலும் ஒரே நாளில் நடக்கவில்லை எனவும் நீதிமன்றம் கூறியது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக