திங்கள், 26 மே, 2014

தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்களின் சொத்துகள் அரசுடமையாக்கப்படும்.....!!!!!

கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம், தடைவிதிக்கப்பட்ட 16 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்களின் எல்லா நிதிகள், ஏனைய நிதிச் சொத்துகள், பொருளாதார வளங்களையும், முடக்கும் வர்த்தமானி அறிவிததலை  இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
பயங்கரவாதத்துக்கு நிதியளிப்போர் என்று ஐ.நா பாதுகாப்புச்சபையின் 1373 தீர்மானத்துக்கு அமைய வர்த்தமானியில் பெயரிடப்பட்ட இந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் சொத்துக்களையே
முடக்குவதாக  அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த தடை அறிவிப்பை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச வர்த்தமானி மூலம்  கடந்த வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய, பயங்கரவாதத்துக்கு நிதியளிப்போர் என்று பிரகடனப்படுத்தப்பட்ட, அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் எல்லாச் சொத்துகள் மற்றும் நிதிகள், பொருளாதார வளங்களும், அவர்களினால் சட்டரீதியாக நியமிக்கப்பட்டவர்களின் வசமுள்ள சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.

இந்த வர்த்தமானி அறிவிப்பு இலங்கை மத்திய வங்கிக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர், குறித்த சொத்துக்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக