திங்கள், 26 மே, 2014

அபிவிருத்தி பல முன்னெடுக்கப்பட்ட போதிலும் மக்கள் துன்பங்களையே அனுபவிக்கின்றனர்....!!!

கோடிக் கணக்கான ரூபா பணம் செலவழித்து அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் மக்கள் துன்பங்களை அனுபவித்த வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் மூத்த சகோதரரது மகன் ஊவா மாகாணசபையின் முதலமைச்சராக கடமையாற்றுகின்றார்.

எனினும், இலங்கையின் மிகவும் வறுமையான ஐந்து பிரதேச செயலகங்கள் இந்த மாகாணத்தில் காணப்படுகின்றது.


அரசாங்கம் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.

விமல் வீரவன்ச போலி நாடகங்களை அரங்கேற்றி வருகின்றார்.  தாய் நாட்டை பாதுகாப்பதாக போலிப் பிரச்சாரம் செய்து நாட்டு மக்களை விமல் வீரவன்ச ஏமாற்றி வருகின்றார்.

அம்பாந்தோட்டை அபிவிருத்திப் பணிகளின் போது எத்தனை பேருக்கு தொழில் வாய்ப்பு கிட்டியது.

அரசாங்கம் நாட்டு மக்களை அடகு வைத்து பாரியளவில் கடன் பெற்று அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுகின்றது.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்காக ஏழு தொன் எடையுடைய தங்கத்தின் பெறுமதியான பணம் செலவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றியீட்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

புத்தள பெல்வத்த பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக