செவ்வாய், 27 மே, 2014

யானைகளிடமிருந்து பாதுகாக்குமாறு கோரி மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை மக்கள் ஆர்ப்பாட்டம்!!


யானைகளிடமிருந்து மக்களை பாதுகாக்குமாறு கோரி மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலையில் திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடைபெற்றது. யானைகளிடமிருந்து மக்களை பாதுகாக்குமாறு கோரிய மக்கள் பேரணியொன்று கொக்கட்டிச்சோலை பிரதான வீதியிலிருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் நடைபெற்ற மண்டபத்துக்கு முன்னால் சென்றது. வவுணதீவு பிரதேசத்திலுள்ள பல்வேறு கிராமங்களில் வசிக்கும் மக்கள், இந்த ஆர்ப்பாட்டப்
பேரணியில் கலந்துகொண்டனர். இதையடுத்து பேரணியில் சென்ற பொதுமக்களினால் கையொப்பமிட்ட மகஜர் ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்னம், மாவட்டஅபிவிருத்திக்குழுக் கூட்டம் நடைபெற்ற மண்டபத்திற்குள் சென்று பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரிடம் கையளித்தார்.


கடந்த மூன்றாண்டுகளுக்குள் 300 வீடுகள் யானைகளின் தாக்குதல்களினால் சேதமடைந்துள்ளதாகவும் 29 பேர் யானைஅடித்து உரிழந்துள்ளதாகவும் யானைகள் கிராமத்திற்குள் புகுந்து வீடுகள் மற்றும் பயிர்ச் செய்கைகள் என்பவற்றைஅழித்து சேதப்படுத்தி வருவதாகவும் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக