செவ்வாய், 27 மே, 2014

கிழக்கு மாகாண சபையில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் !!

முள்ளிவாய்க்கால் நினைவு தினம், தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்களால் கிழக்கு மாகாண சபையில் இன்று செவ்வாக்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது . கிழக்கு மாகாண சபையின் அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமானது. இதில் கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கறுப்புச் சால்வைகள் அணிந்து தமது எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டதுடன்
அஞ்சலியும் செலுத்தினர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டத்தின் முடிவுக்கு அமைய இந்த செயற்பாடு மாகாண சபையில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டதாக மாகாண சபையின் உறுப்பினர் கே.கருணாகரம்(ஜனா) தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக