"இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு, இலங்கை - இந்திய மீனவர் சிக்கலுக்கு இணக்கமான உடன்பாடு ஆகியவற்றுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய விடயங்களைத் தீர்த்து வைப்பதற்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும்." - இவ்வாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் 'வெட்டு ஒன்று துண்டு இரண்டாக' புதிய இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி கூறிவிட்டார். இந்தியப் பிரதமரின் பதவியேற்பு
விழாவுக்காக புதுடில்லிக்குச் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று முற்பகல் இந்தியப் பிரதமருடன் சுமார் 20 நிமிட நேரம் நேரடியாகப் பேசினார். அப்போதே இந்த விடயங்களை இந்தியப் பிரதமர் தெளிவாகத் தெரிவித்தார் என புதுடில்லி வட்டாரங்கள் 'மலரும்' இணையத்துக்குத் தெரிவித்தன. இந்தச் சந்திப்பு புதுடில்லியில் ஹைதராபாத் இல்லத்தில் இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக