சனி, 3 மே, 2014

உலகின் எந்தவொரு ஊடகமும் சுயாதீனமாக இயங்கவில்லை – அரசாங்கம்!!!

உலகின் எந்தவொரு ஊடகமும் சுயாதீனமாக இயங்கவில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
உலக ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசாங்கம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது. பூரணமாக ஊடக சுதந்திரம் சமூகத்திற்கு பாதக விளைவுகளையே ஏற்படுத்தும் என அரசாங்கத் தகவல் திணைக்களப் பணிப்பாளர் ஆரியரட்ன அத்துகல தெரிவித்துள்ளார். அநேகமாக ஊடகங்கள் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் சில கருத்துக்களை மக்கள் மீது திணிப்பதனால் மக்களினால் சரியானதை தீர்மானிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பீட்டளவில் உலகின் ஏனைய நாடுகளை விடவும் இலங்கையில் ஊடக சுதந்திரம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் பெரும் எண்ணிக்கையிலான ஊடகங்கள் செயற்பட்டு வருவதாகவும், இதன் மூலம் ஊடகத் தணிக்கை கிடையாது என்பது புலனாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அரங்கில் இலங்கையை தனிமைப்படுத்தும் நோக்கில் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இலங்கையின் ஊடக சுதந்திர நிலைமை குறித்து பிழையான தகவல்களை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். நாட்டில் ஊடக சுதந்திரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிப்பதற்கு போதியளவு ஆதராங்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக