செவ்வாய், 27 மே, 2014

மோடி அரசின் மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!!


புதிதாக அமைந்துள்ள மோடி அரசில் நேற்று பதவியேற்ற மத்திய அமைச்சர்களுக்கான இலாகா விவரங்கள் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்பட்டது. அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை பிரதமர் நரேந்திர மோடியின் வசம் உள்ளது.மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு உள்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்க்கு வெளியுறவுத்துறையும், அருண் ஜேட்லிக்கு நிதி மற்றும் பாதுகாப்புத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய
அமைச்சர்களான ரவிசங்கர் பிரசாத்துக்கு சட்டம் மற்றும் தொலைத்தொடர்பு துறையும், சதானந்த கவுடாவிற்கு ரயில்வே துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதின் கட்கரிக்கு தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. வெங்கய்யா நாயுடுவிற்கு நகர்புற வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

நஜ்மா ஹெப்துல்லாவிற்கு சிறுபான்மையினர் நலத்துறை, அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு மனிதவள மேம்பாட்டுத் துறையும், கோபிநாத் முன்டேவுக்கு ஊரக வளர்ச்சி துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.  ராம்விலாஸ் பாஸ்வான் உணவு மற்றும் நுகர்பொருள் துறையும், மேனகா காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் துறையையும், ஹர்ஷவர்தன் சுகாதாரத்துறையயும் கவனிக்க உள்ளனர். இவர்கள் தவிர தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்களான  நிர்மலா சீதாராமனுக்கு வணிகவரி மற்றும் தொழில்துறையும், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கனரக தொழில்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் அனந்தகுமாருக்கு ரசாயனம் மற்றும் உரத்துறையும், அமைச்சர் ராதாமோகனுக்கு வோளாண்துறையும், அசோக் கஜபதி ராஜூவிற்கு விமானப் போக்குவரத்து துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஹர்சிம்ரத்கவுருக்கு உணவு பதப்படுத்துதல் துறையும், சந்தோஷ் கங்குவாருக்கு ஜவுளித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனந்த் கீதேவிற்கு கனரக தொழில்துறையும், அமைச்சர் உமாபாரதிக்கு நீர்வளத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.  இவர்களி தவிர கல்ராஜ் மிஸ்ராவிற்கு சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்துறையும், ஜூவல் ஓரம் பழங்குடியினர் நலத்துறையையும், நரேந்திர சிங் தோமர் சுரங்கத் துறையையும், தாவர்சந்த் கெலாட் சமூகநீதி மற்றும் அமலாக்கத்துறையையும் கவனிக்க உள்ளனர்.

மத்திய அமைசச்ர்கள் பிரகாஷ் ஜவடேகர் தகவல் ஒலிபரப்பு துறை, பியூஸ் கோயல் மின்சாரம் மற்றும் நிலக்கரித் துறை, தர்மேந்திர பிரதானுக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்திரஜித் சிங்கிற்கு திட்ட அமலாக்கம் மற்றும் புள்ளியியல் துறை இலாகாவும், ஜிதேந்திர சிங்குக்-கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையும், முன்னாள் ராணுவத் தளபதியும் தற்போதைய மத்திய அமைச்சருமான வி.கே.சிங்கிற்கு வெளிநாடு வாழ் இந்தியர் நலன் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக