சனி, 31 மே, 2014

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வீட்டை அபகரிக்கவில்லை...!!!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வீட்டை அபகரிக்கவில்லை என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஏழு நடா அவனியூவில் அமைந்துள்ள சொகுசு வீடொன்றை போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அபகரித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி அடிப்படையற்றது.

அபகரிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வீடு, நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கொழும்பு பல்கலைக்கழகத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

2011ம் ஆணடு நவம்பர் மாதம் 15ம் திகதி முதல் இந்த வீட்டை பல்கலைக்கழக நிர்வாகம் பயன்படுத்தி வருகின்றது.

பத்திரிகையில் வெளியான செய்தி தவறானது.


டாக்டர் சிவா சின்னத்தம்பி என்பவரினால் 2005ம் ஆண்டு தனது மருமகனான குமாரன் சித்ராஞ்சன் என்பவருக்கு வாழ்வுரிமை அளித்து, சொத்தை பல்கலைக்கழகத்தின் பெயருக்கு எழுதியுள்ளார்.

சட்டத்தரணிகளின் ஊடாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நபரின் மறைவிற்கு பின்னர், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய சொத்துக்கள் கொழும்பு பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றில் உரிமை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து சட்ட ரீதியாக குறித்த வீட்டை கொழும்பு பல்கலைக்கழகம் பெற்றுக் கொண்டு பயன்படுத்தி வருகின்றது என எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரபல அமைச்சர், தமிழருக்கு சொந்தமான வீட்டை போலி ஆவணங்களை தயாரித்து கொள்ளையிட்டதாக நேற்று வெளியான செய்தித் தாள்களில் செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இந்த செய்திக்கு பதிலளிக்கும் நோக்கில் அமைச்சர் திஸாநாயக்க ஊடகங்களுக்கு மறுப்புத் தெரிவித்து இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக