இந்த வருடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட டெங்கு நோயாளர்களில் 60 வீதமானவர் மேல் மாகாணத்தில் இருந்தே அடையாளங் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேல் மாகாணத்தில் வீடு வீடாகச் சென்று நுளம்பு குடம்பிகள் உள்ள இடங்கள் குறித்து பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.
கடந்த 5 மாத காலத்தில் 11,157 டெங்கு நோயாளர்கள் நாடுபூராவும் அடையாளங் காணப்பட்டனர் இதில் 60 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்தே கண்டு பிடிக்கப்பட்டனர். மேல் மாகாணத்தில் டெங்கு நோய் வேகமாக
பரவுவதை தடுப்பதற்காக வீடு வீடாகச் சென்று டெங்கு குடம்பிகள் இருப்பது குறித்து ஆராய விசேட அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் டெங்கு குடம்பிகள் குறித்து ஆய்வு நடத்துவதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு கூறியது.
பாடசாலைகள் உட்பட அரச நிறுவனங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
டெங்கு நோயினால் இதுவரை 33 பேர் இறந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக