அநுராதபுரம் இராணுவப் படைமுகாம் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் விமானப்படை உறுப்பினர் ஒருவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அநுராதபுரம் விசேட நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த அரவிந்தன் என்பவருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் மீது குற்றப்ப த்திரிகையை தாக்கல் செய்யும் முகமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த குற்றச்சாட்டின்பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மற்றும் ஒருவரின் விளக்கமறியல் காலத்தையும் நீதிமன்றம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை இன்று நீடித்தது.
2007ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் திகதி அநுராதபுரம் இராணுவ முகாம் மீது தரை மற்றும் வான் வழியாக நடத்தப்பட்ட தாக்குதலில் 14 படையினர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக