பெருந்தோட்ட தொழிலாளிகளின் சேமநல நிதி மற்றும் நம்பிக்கை நிதியில் ஏற்படும் மோசடியை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் நகரை அண்மித்த தோட்ட பகுதிகளை சேர்ந்த தோட்ட தலைவர்கள், தொழிலாளர்கள், தொழிலாளர் நலன் திட்டத்தின் அமைப்பு குழு ஆகியோர் இணைந்து பதாதைகளை ஏந்தி இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ஹட்டன் தொழிலாளர் நலன் திட்டத்தின் தலைவர் பெரியசாமி பிரதீபன் கருத்து தெரிவிக்கையில்,
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சேமநல நிதி மற்றும் நம்பிக்கை நிதி ஒரு பரம்பரை சொத்தாகும். போலி தரகர்கள் தோட்டங்களில் பிரவேசித்து இலகுவாக பெற்று தருவதாக கூறி சூரையாடி செல்கின்றார்கள்.
இவற்றை கட்டுப்படுத்தி இவ்வாறு சூரையாடுபவர்களை உடனடியாக கைது செய்ய கூறியே இவ்வாறான ஒரு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சேமநல நிதி மற்றும் நம்பிக்கை நிதி இலகுவாக பெற்றுகொள்ள வேண்டிய ஒரு விடயமாகும்.
இதற்கான அரச திணைக்களத்தின் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு பிராந்தியத்திலும் அரச திணைக்களங்கள் இயங்குகின்றன.
அரச முகவர்கள் இயங்குகின்றார்கள். எனினும் இவ்வாறு போலி தரகர்களிடம் சென்று சேமநல நிதி மற்றும் நம்பிக்கை நிதிக்காக உங்கள் பணத்தை வீண்விரயப்படுத்தி உங்கள் சொத்தை இழந்து விட வேண்டாம்.
சட்டவிரோத முகவர்கள் உங்கள் தோட்டப்பகுதியில் இருப்பார்கள்
ஆனால் அவர்கள் தொடர்பிலான தகவல்களை அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது தொழிலாளர் நலன் திட்டத்திலோ தெரிக்குமாறு ஹட்டன் தொழிலாளர் நலன் திட்டத்தின் தலைவர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக