சனி, 31 மே, 2014

யாழ் நாவற்குழி பாலத்தை அகற்ற முயற்சி...!!!

யாழ்ப்பாணம் நாவற்குழி பாலத்தை முற்றாக அகற்றி மண் நிரப்பி அதனை நிரந்தர ஒரு தரைவழி போக்குவரத்து வீதியாக்குவதற்கான முதற்கட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.
வடபகுதிக்கான போக்குவரத்தை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தும் அரசின் திட்டங்களில் யாழ்ப்பாணம் நோக்கிய புகையிரத சேவை- தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் திறன்மிகு சேவைகளை கண்காணித்தல் எனும் வரிசையில் நாவற்குழி பாலத்தை அகற்றும் வேலைத்திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்தப்பாலம் தெற்கிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான பிரதான நுழைவாயிலாக அமைவதுடன்- தினந்தோறும் அதிகளவான உள்ள10ர் மக்கள் சுற்றுலாப்பயணிகளென அதிகமானோர் இந்த பாலத்தை
பயன்படுத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஒரே தடவையில் கூடுதலான அளவு வாகனங்கள் குறித்த பாலத்தால் பயணிப்பதால் வலிமைமிக்க தகரப்பாலம் அடிக்கடி சேதமாவதாகவும்- இதனால் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினருக்கு பராமரிப்பு செலவினம் அதிகரித்தும் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே அதிரிக்கும் செலவினத்தை கட்டுப்படுத்தவும்- குறித்த பகுதிக்கான போக்குவரத்தினை உறுதிப்படுத்துவதற்கும் சிறந்த வழியாக மேற்படி பாலத்தை அகற்றி அதற்கு பதில் நிலத்தொடர்புள்ள நீண்ட வீதியாக ஆக்குவதற்கான ஆரம்பகட்ட ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆழம் குறைந்த கடலில் இப்பாலம் அமைந்துள்ளதால் இம்முயற்சி சாதகமாக அமையலாம் எனவும்- இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டால் சுமார் ஒரு வருடத்திற்குள் அதனை நிறைவு செய்து விடலாம் எனவும் ஆய்வுகளை மேற்கொள்ளும் பொறியியல் நிறுவனத்தின் அதிகாரியொருவர் கூறினார்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக