இந்து ஆலயம் இருக்கும் போது, அதனையும் கருத்தில் கொண்டு செயல்பட்டு இருந்தால் எதிர் கருத்துக்கள் தோன்றியிருக்க வாய்ப்புகள் இல்லை என ஒருவர் தெரிவித்தார்.
கன்னியா வெந்நீரூற்று இரண்டு வருட காலத்தினுள் புத்த பெருமான் கம்பீரமாய் எழுந்தருளி இருக்கும் இந்த வேளையில் காலம் காலமாக சிவனாலயம் எந்தவித மாற்றமுமின்றி காணப்படுவது கவலைக்கிடமாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் விசனம் தெரிவிக்கின்றார்கள், இது தொடர்பாக சுற்றுலாபயணியொருவர் கருத்து தெரிவிக்கையில் ஆரம்பகாலம் முதல் 2011 நடுப்பகுதி வரை சிவனாலயமே காணப்பட்டு சைவ சமய விழுமியங்கள் மற்றும் வரலாற்றை கொண்டதாக அமைந்து காணப்பட்டது, எனினும் தற்போது புத்த கோவில் எழுந்தருளியிருப்பதுடன், சிவனாலயம் கவனிப்பாரற்று காணப்படுவது எனக்கு மனவேதனையளிக்கிறது. விளம்பர பலகையில் கன்னியா வெந்நீரூற்று பௌத்த சமய வரலாற்றுடன் தொடர்புடையது என அறிக்கையிடப்பட்டுள்ளது. எந்தவிதமான தமிழ் அறிவிப்புகளும் அற்ற மோசமான பேரினவாத போக்கை காட்டும் சுற்றுலா தளமாக மாற்றப்பட்டுள்ளது மனவேதனையளிக்கிறது. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண,நகர,பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் உடனடியாக இந்த போக்கை மாற்றியமைக்க முன்வரவேண்டும். இவர்களுக்கான வருட ஒதுக்கீட்டில் ஒதுக்கப்படும் அபிவிருத்தி நிதிகளில், ஆலய புனரமைப்பில் பயன்படுத்த வேண்டும் எனவும், ஆலய பகுதியில் தமிழ் அறிவித்தல் பலகைகள் அவர்களின் நிதிமூலம் இதனை மாற்றி அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து மற்றொருவர் கருத்து கூறுகையில் எமது கலை கலாசார சமூக காப்புடன் உரிமைக்காக வாக்களிக்கும் எம்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கண்ட எதனையும் கருத்தில் கொள்வதில்லை. இவர்கள் யாராவது தங்கள் வருட நிதி ஒதுக்கீட்டின் கணக்கறிக்கையை மக்களுக்கு தெரியபடுத்தியதாக நான் அறிந்து இல்லை, எனவே மிகவும் பொறுப்புள்ள சமூகத்தில் சமூக நலனில் அதீத அக்கறையுள்ள அங்கத்தவர்கள் பதவிகளுக்கு நாம் இனி அனுப்பவேண்டும் என தெரிவித்தார்.
பூர்வீகம் செய்திகளுக்காக திருமலையிலிருந்து கான் (khan)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக