செவ்வாய், 27 மே, 2014

இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பில் மோடி திடசங்கற்பம் பூண்டுள்ளாராம்!!



இலங்கையில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதில் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி திடசங்கற்பம் கொண்டுள்ளார். ஆகவே அது குறித்து யாரும் அஞ்சத் தேவையில்லை. இந்திய மத்திய அரசில் புதிய இணை அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் பொன். இராதகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார் என பி.ரி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியப் பிரதமரின் பதவியேற்பு நிகழ்வுக்கு இலங்கை ஜனாதிபதி அழைக்கப்பட்டமையை ஒட்டி எழுந்துள்ள சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார் என்று தெரிவிக்கப்பட்டது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக