அமெரிக்காவின் புதிய வெளிநாட்டு கொள்கை வெளிநாட்டு நட்பு நாடுக ளுடன் இணைந்த கூட்டு நடவடிக்கையை அடிப்படையாக கொண்டதாக இருக்கும் என்று ஜனாதிபதி பராக் ஒபாமா உறுதி அளித்துள்ளார்.
நியுயோர்க்கில் நேற்று முன்தினம் நடந்த அமெரிக்க இராணுவ அகடமி பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய ஒபாமா, கடந்த காலங்களில் நிகழ்ந்த பாரிய தவறுகள் தவிர்க்கப்படும் என்றார். எனினும் இந்த விடயத்தில் அமெரிக்கா தொடர்ந்தும் முன்னின்று செயற்படும் என்று ஒபாமா குறிப்பிட்டார். சர்வதேச தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு 5 பில்லியன் டொலர் நிதியத்தை அறிவித்த அவர், 'போர்க்களத்தின்; மூலம் அமெரிக்கா மேலும் எதிரிகளை உருவாக்காது" என்று வாக்குறுதி அளித்தார். ஒரு பலவீனமான
வெளிநாட்டு கொள்கை குறித்து கண்டனம் வெளியிட்ட அவர் உக்ரைன் மற்றும் ஈரானில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்து வரவேற்பு வெளியிட்டார்.
'கூட்டு இராணுவ நடவடிக்கைகளின் திறன் குறித்து எப்போதும் சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. அவ்வாறானவர் கள் சர்வதேச நிறுவனங்கள் அல்லது சர்வதேச சட்டத்தை மதிப்பதை பலவீன மாக கருதுகிறார்கள். அவர்களது முடிவு தவறென்று நான் நினைக்கிறேன்." இதில் சர்வதேச சட்டத்திற்கு மதிப்பளித்து அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை இருக்கவேண்டும் என்றும் ஒபாமா குறிப் பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக