ஞாயிறு, 18 மே, 2014

வன்னியில் இராணுவத்தினர் வீடு வீடாக சென்று சோதனை....!!!!!

வீடுகளில் அஞ்சலி செலுத்த தடையில்லை என்று தெரிவித்த இலங்கை அரசின் படைகள் வன்னியில் உள்ள சில கிராமங்களில் வீடு வீடாக சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். போரில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கவே இவ்வாறு சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ஆலயங்களில் இன்று மாலையும் நாளை மாலையும் மணி அடிக்கவோ விசேட பூசைகள் செய்யவோ அனுமதி இல்லை என்றும் இராணுவத்தினர் கூறி வருகின்றனர். இதனை மீறி செய்தால் பயங்கரவாத தடைச் சட்டத்தின்
அடிப்படையில் கைது செய்ய நேரிடும் என்றும் கிராம அமைப்புக்களுக்கு இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர்.

இறந்தவர்களையும் காணாமல் போனவர்களையும் தொடர்ந்தும் நினைவுகூறுவது இன நல்லிணக்கத்தை பாதிக்கும் என்றும் அதை மறந்து இன நல்லிணக்கை உருவாக்குவது சிறந்தது என்று போரில் உயிரிழந்த சிலரது வீடுகளுக்குச் சென்று இராணுவத்தினர் ஆலோசனை கூறி வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு நாட்களை முன்னிட்டு திடீர் திடீரென சோதனை நடவடிக்கைளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். முள்ளிவாய்க்கால், சுகந்திரபுரம், மாத்தளன், வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அந்தப் பகுதியில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக