வெள்ளி, 30 மே, 2014

பேஸ்புக் சமூகவலை தளங்கள்: விழிப்புணர்வு திட்டம்..!!!!

பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங் களின் ஊடாக தகவல்களை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டமொன்றை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்க அரசாங்க தகவல் திணைக்களம் தீர்மானித் துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் “தெசத்திய” சஞ்சிகையின் அனுசரணையில் இவ்வேலைத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் வசந்தபிரிய ராமநாயக்க தெரிவித்தார். “சமூக வலைத்தளங்கள் மற்றும் எதிர்கால இளைஞர்கள்” என்ற தொனிப்பொருளில் ஜூன் மாதம் 2ம் திகதி இரத்தினபுரி பர்கியூசன் பெண்கள் கல்லூரி மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை விழிப்பூட்டல் கருத்தரங்கு
நடைபெறவுள்ளது.

சமூக வலைத்தளங்கள் எதிர்கால இளைஞர்களுக்கு எதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக “உலகளாவிய அனுபவம் மற்றும் இலங்கை” என்ற தொனிப்பொருளில் களனி பல்கலைக்கழக தொலைத்தொடர்பு ஆய்வுப் பேராசிரியர் ஆரியரத்ன அதுகல, பேஸ்புக், வன்முறை மற்றும் ஊடக தர்மம் என்ற தலைப்பில் கொழும்பு பல்கலைக்கழக கணனி விஞ்ஞான துறையில் சிரேஷ்ட விரிவுரையாளர் ரி.நந்தசேன ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக