ஆண், பெண் இருபாலாருக்கும் நடைபெற்ற இப் போட்டிகள், நெளுக்குளம் கலைமகள் மைதானத்தில் பெண்களுக்கான உதைபந்தாட்டமும், முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆண்களுக்கான உதைபந்தாட்டமும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வுகள் வவுனியா தெற்கு கல்வி வலய உதவிக்கல்வி பணிப்பாளர்(உடற்கல்வி) திரு எ. எம். சுபைர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகர முன்னாள் உப நகர பிதாவும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) , வவுனியா தெற்கு கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் திரு ஐ.கே. தவரட்ணம், வவுனியா வடக்கு கல்வி வலய உதவிக்கல்வி பணிப்பாளர்(உடற்கல்வி) திரு கே.மங்களகுமார் , நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய அதிபர் திரு எஸ்.அமிர்தலிங்கம், முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் திரு எம்.எஸ்.ரம்சின், வவுனியா வடக்கு கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திரு ரவிச்சந்திரன், சமூக சேவையாளர் திரு எ.எம்.ரகீம் ஆகிய அதிதிகள் கலந்து நிகழ்வை சிறப்பித்தார்கள்.
நிகழ்வில் உரை நிகழ்த்திய வவுனியா தெற்கு கல்வி வலய உதவிக்கல்வி பணிப்பாளர்(உடற்கல்வி) திரு எ. எம். சுபைர் அவர்கள்,
பாரிய சிரமங்களின் மத்தியில் இவ் விளையாட்டு விழாவை நாம் நடாத்திக்கொண்டிருக்கிறோம், எனவே வீரர்கள் அதனை கருத்தில் கொண்டு எமக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், தமது திறமைகளை வெளிப்படுத்தி சிறந்த வீர, வீராங்கனைகளாக தேசிய மட்டம் வரை செல்ல வேண்டும், அத்துடன் இன்றைய நிகழ்வின் ஆரம்பிப்பாளரும், எமது வவுனியா நகர முன்னாள் உப நகர பிதாவும் சமூக சேவையாளருமான மோகன் என அழைக்கப்படும் திரு சந்திரகுலசிங்கம் அவர்கள் எமது நிகழ்வு சிறப்புற உதவிகளை வழங்கியதுடன், ஆரம்ப காலங்கள் தொடக்கம் இன்றுவரை எமது கல்வி சமூகத்துக்கும் மக்களுக்கும் சேவையாற்றி வருகிறார், அதன் ஒரு அங்கமே 1990 காலப்பகுதிகளில் வவுனியா நகரில் பல அபிவிருத்திகளும், அத்துடன் எமது கல்வியின் சிகரமாய் வவுனியா நகர் சிறப்புற அத்திவாரமாய் அமைந்த எமது பொது நூலகத்தை இவ் இடத்தில் உதாரணமாய் கூற விரும்புகிறேன் எனவும் கிராமங்களில் நேரடியாக சென்று மக்களின் தேவைகளை கேட்டறிந்து அவர்களின் தேவைகளை கருத்தில்கொண்டு சேவையாற்றி வருகிறார் எனவும் தெரிவித்தார். நிகழ்வின் அதிதிகளையும் சமூக சேவையாளர்களையும் நிகழ்விற்கு வரவேற்றார்.
தொடர்ந்து சிறப்புரை நிகழ்த்திய வவுனியா நகர முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள்,
எமது மாணவச்செல்வங்கள் வீர,வீராங்கனைகளாக பங்கேற்று நிற்பதை பார்த்து மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன், எமது தமிழ் கல்விச்சமூகம் பாரிய பின்னடைவை சந்தித்தும் இன்று சாவால்களுக்கும் மத்தியில் தலை நிமிர்ந்து நிற்கின்றோம். மாணவ செல்வங்கள் கல்வியிலும் விளையாட்டு துறையிலும் மேலோங்கி உங்கள் சாதனைகளை தேசிய மட்டத்திலும் பதிவு செய்து வவுனியா மண்ணிற்கு பெருமை சேர்க்க நல்லாசிகளை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறேன், இவ் மண் பல விளையாட்டு வீர வீராங்கனைகளையும், புத்திஜீவிகளையும் தொடர்ந்து தருவதற்காய் உழைக்கும் எமது சமூகத்தை மறக்க முடியாது அந்த வகையில் ஒழுங்கமைத்து நடாத்தும் எமது ஆசான்களுக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
நிகழ்வுகளில் கலந்து கொண்டதன் பின்னர் நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தின் அபிவிருத்தி தொடர்பில் கருத்து தெரிவித்த புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகர முன்னாள் உப நகர பிதாவும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள்
கிராமத்தில் கல்வி, இணைப்பாடவிதான செயற்பாடுகளில் துரித வளர்ச்சி கண்டிருப்பதையிட்டு மன மகிழ்ச்சியடைவதுடன், ஆசிரியர்களின் அர்பணிப்பான சேவையும், அதிபர் திரு எஸ்.அமிர்தலிங்கம் அவர்களின் சிறந்த வழிநடத்தலிலும் கலைமகள் மகா வித்தியாலய பெறுபேறுகளில் பாரிய வெற்றி கண்டிருப்பதையிட்டு கலைமகள் கல்விச்சமூகத்துக்கு எமது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவிப்பதுடன், 2000 க்கு மேற்பட்ட மாணவர்களுடன் அழகிய சூழலில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் ஆசான்களின் சேவைக்கு தலைவணங்கி, இவ்வாறு தமிழ் கல்வி சமூகத்தில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய அதிபர், ஆசான்கள், பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகளுக்கு எமது கழகத்தின் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதுடன். சிறந்த தமிழ் மாணவ சமூகம் உருவாகும் என்பது உறுதியெனவும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக