புதன், 30 ஏப்ரல், 2014

வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள, குளத்தின் மோசமான நிலை..!!!

வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள, குளத்தின் எழில் மிகு அழகு (ஆதி விநாயகர் ஆலயத்தின் அருகே உள்ளது) யார் இதனை பாதுகாப்பது??


அண்மைக் காலமாக, வைரவபுளியங்குள குளத்தின் உள்ளே, பொதுமக்கள் பொலிதீன் மற்றும் வீட்டுக் கழிவுப் பொருட்களை எடுத்து வந்து, யாருக்கும் தெரியாது, குளத்தின் உள்ளே வீசிவிட்டு செல்வதால், அழகாயுள்ள குளம், குப்பைகளால் நிரம்பி வருகிறது, இந்த நிலை தொடருமானால்! அழகான குளம், குப்பை மேடாக காட்சிதருவதை, விரைவில் காணலாம்! இதனை அனுமதிப்பதா? அல்லது தடுப்பதா? 


போசனை மிகுதியால் குளத்தின் நீர் மேற்பரப்பு பச்சை புல்வெளி போன்று காட்சி தருவது கண்கூடாக பார்க்ககூடியதாக உள்ளது. இது சாலச்சிறந்தது அல்ல சூழல் மாசடைவதற்கான ஓர் அடிப்படை, 

சம்பந்தபட்ட அதிகாரிகளே இது உங்களின் கவனத்திற்கு

1-நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு தொழில் வீழ்ச்சி.
2-நீர் வாழ் தாவரங்களும் விலங்குகளும் இறக்க கூடிய துர்ப்பாக்கிய நிலை. 
3-துர்நாற்றம் வீசும் நாள் வெகு தூரமில்லை.
4-இயற்கை எழில் பாதிப்பு. 
இன்னும் பல.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக