செவ்வாய், 9 நவம்பர், 2010
வடக்கு கிழக்கிலிருந்து அதிக இளைஞர் யுவதிகள் இளைஞர் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் போட்டி..!
வடக்கு கிழக்கிலிருந்து கூடுதலான இளைஞர் யுவதிகள் இம்முறை இளைஞர் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் போட்டியிடவுள்ளதாக இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இளைஞர் விவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இளைஞர் பாராளுமன்றத்திற்கான தேர்தல் இம்மாதம் 27ம் திகதி நடைபெறவூள்ளது. நாடளாவிய ரீதியில் 332 தேர்தல் நிலையங்களில் தேர்தல் நடத்தப்படும். முதல் அமர்வு டிசம்பர் 12ம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெறும். இளைஞர் பாராளுமன்றத்திற்கான வேட்புமனுத்தாக்கல் நாளை பிற்பகல்வரை இடம்பெறும். 332 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 1934 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இத்தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இம்மாதம் 25ம் திகதியுடன் நிறைவடையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக