சனி, 6 நவம்பர், 2010

வடக்கில் முஸ்லிம்களை மீளக்குடியமர்த்துவதில் அரசு அலட்சியம் : ஸ்ரீலமுக..!

வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக்குடியேற்றுவதில் அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசன் அலி வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,ஏனைய பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுடன் முஸ்லிம் மக்களை ஒன்றிணைத்துப் பார்க்க முடியாது. ஏனெனில் இது இடம்பெயர்வல்ல. வடபகுதியிலிருந்து 1990களில் முஸ்லிம்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டனர்.இது இனச் சுத்திகரிப்பாகும். எனவே முஸ்லிம் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவது தொடர்பில் அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.வடபகுதியிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் தங்கியுள்ள முஸ்லிம் மக்களை, புத்தளத்தில் அல்லது மன்னாரில் உடனடியாகப் பதிய வேண்டும் என்று தேர்தல் திணைக்களம் நெருக்கடி கொடுத்துள்ளது. இது வடபகுதி முஸ்லிம்களை கூறுபோடும் செயலாகும்.20 வருடகால பிரச்சினைக்கு இரு வாரங்களுக்குள் தீர்வு காணப்போவதாகக் கூறி எதுவித வசதியுமற்ற காடுகளுக்குள் குடியேற்றுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அரசின் மீள்குடியேற்றங்கள் முறையானதாக அமையவில்லை.அரசு இம்மக்களை சொந்த இடங்களுக்கு மீளக்குடியமர்த்துவதில் விரைவில் ஆக்கபூர்வமான ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக