திங்கள், 8 நவம்பர், 2010
பிரபாகரனை காரணம்காட்டிய நிதிசேகரிப்பு தோல்வி..!
பிரபாகரனை காரணம்காட்டிய நிதிசேகரிப்பு தோல்வி- பிரபாகரன் உயிரிழக்கவில்லை எனப் பிரச்சாரம் செய்து, அதன் ஊடாக மேற்கொள்ளப்பட்ட நிதி திரட்டல் முயற்சி தோல்வியைத் தழுவியுள்ளதாக பயங்கரவாதத் தடுப்பு தொடர்பான நிபுணர் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். நோர்வேயை மையமாகக் கொண்டு இயங்கிவரும் பேரின்பநாயகம் சிவகரன் எனப்படும் நெடியவன், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பிரச்சாரம் செய்து அதன்மூலம் நிதி திரட்டுவதற்கு முனைப்பு காட்டியதாக குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், புலிகள் அமைப்பை மீளமைப்பதற்கு நிதி உதவிகளை வழங்குமாறும் கூறி நெடியவன் புலம்பெயர் தமிழர்களிடம் பணம் திரட்டியுள்ளதாக ரொஹான் குணரட்ன குற்றம் சுமத்தியுள்ளார். நெடியவனின் இந்தப் பிரச்சாரத்திற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் செவி சாய்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தன்னார்வ அடிப்படையில் நிதி திரட்டுதல் மட்டுமன்றி போலியான கடன் அட்டைகள், காசோலை மோசடி, சட்டவிரோத ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத வழிகளிலும் பணம் திரட்டுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக