திங்கள், 8 நவம்பர், 2010
பன்குளம் தமிழ் கிராமத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்..!
திருமலையின் புறநகர் பகுதியிலுள்ள பழம்பெரும் தமிழ் கிராமமான பன்குளம் கிராமத்தில் சமீபகாலமாக அரசாங்கம் திட்டமிட்டு சிங்கள குடும்பங்களை குடியேற்றி வருகின்றது. திருமலையிலிருந்து வவுனியா செல்லும் வீதியிலேயே பன்குளம் கிராமம் உள்ளது. இங்கு காலம்தொட்டு தமிழர்கள் வாழ்ந்துவந்த இடங்களில் தற்போது மெதுமெதுவாக சிங்களவர்கள் குடியேறிவருகின்றனர் .பன்குளம் பிரதான வீதியின் இருமருங்கிலும் இவ்வாறு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர். இது தமிழரின் பூர்வீக கிராமமாகும். பன்குளம் திருமலையில் நெற்செய்கைக்கு பிரசித்தி பெற்ற இடமாகும் சிங்களவர்கள் குடியேறும் பிரதேசங்களில் உள்ள சிதைவடைந்த தமிழர்களின் வீடுகளும் கோவில்களும் அவை தமிழரின் பூமி என்பதை நிரூபித்துக்காட்டுகின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக