திங்கள், 22 நவம்பர், 2010

மிருசுவில் ரயில் நிலையம் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணம்..!

யாழ்ப்பாணம், மிருசுவில் ரயில் நிலையம் 20 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். மத்திய மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் இந்த புகையிரத நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையிலான குழுவினர் எதிர்வரும் 27ம்திகதி சனிக்கிழமை மிருசுவில் பிரதேசத்திற்கு நேரில் விஜயம்செய்து நிலைமைகளை பார்வையிடவுள்ளனர். ரயில் நிலையத்தை புதிதாக நிர்மாணிப்பதற்கென 20 மில்லியன் ரூபாவுக்கான காசோலையை அன்றையதினம் மத்திய மாகாண முதலமைச்சர் டிக்கிரி கொப்பேகடுவ தன்னிடம் கையளிக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். ரயில் நிலைய நிர்மாணப் பணிக்கான கேள்விப்பத்திரம் வடமாகாண சபையினால் வெகுவிரைவில் கோரப் படவுள்ளதாகத் தெரிவித்த ஆளுநர், மூன்று மாத காலத்திற்குள் நிர்மாணப்பணிகளை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக