திங்கள், 25 அக்டோபர், 2010

வெற்றுப் பீரங்கி குண்டுகளை கடத்த முனைந்த பிக்கு உள்ளிட்ட நால்வர் கைது..!

89 வெற்றுப் பீரங்கி தோட்டாக்களை லொறியில் கடத்திச் செல்ல முற்பட்ட ஆறு சந்தேகநபர்களை கண்டி, தெல்தெனிய நகரில் வைத்து பொலீசார் கைதுசெய்துள்ளனர். பிலிமத்தலாவை, தெவுலுகல, அம்பிட்டிய மற்றும் கரலியத்த பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டதாகவும், குறித்த சந்தேகநபர்களுள் பௌத்த பிக்கு ஒருவர் உள்ளடங்குவதாகவும் பொலீசார் கூறியுள்ளனர். இதேவேளை கம்பஹா மாவட்டம் களனி, வனவாசல பகுதியில் 9மில்லிமீற்றா ரக தோட்டாவுக்கான துப்பாக்கியுடன் நான்கு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வனவாசலப் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக