ஞாயிறு, 3 அக்டோபர், 2010
யாழ். கிளிநொச்சி பாரிய நீர்விநியோகத் திட்டம்..!
யாழ். கிளிநொச்சி பாரிய நீர்விநியோகத் திட்டம் (இரணைமடுத் திட்டம்) 02ஆயிரம் கோடிரூபா செலவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. 2002ல் ஆசிய அபிவிருத்தி வங்கி, தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை மற்றும் யாழ். கிளிநொச்சி அரசஅதிபர் பிரிவுக்குட்பட்ட 55கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரதிபலிப்பாகவே இத்திட்டம் முழுமைபெற்று ஆரம்பிக்கப்படவுள்ளது என தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். யாழ். கிளிநொச்சி நீர் விநியோகத் திட்டத்தின் அபிவிருத்தி எனும் தலைப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பின் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மேற்கொண்ட முயற்சியை அடுத்து 2000கோடி ரூபா நிதி யாழ். கிளிநொச்சி நீர்விநியோகத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியானது வடக்கு பிர தேசத்தின் குடிநீர் பற்றாக்குறையான அனைத்து பிரதேச மக்களின் தேவைக்கும் பயன் படுத்தப்படவுள்ளது. அரசின் தேசிய கொள்கை பிரகாரம் 2015ல் 85 வீதமான மக்களுக்கு பாதுகாப்பான குடிதண்ணீர் வழங்கவேண்டும். 2025ல் 100 வீதமான குடிதண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஆனால், தற்போது பிரதேசசபை நீர்வழங்கல் வடிகால் சபைமூலம் யாழ்ப்பாணத்திற்கு 3.2 வீத நீரும் கிளிநொச்சிக்கு 1.1வீத நீரும் மன்னாருக்கு 20.3வீத நீரும் வவுனியாவுக்கு 4.5வீத நீரும் வழங்கப்படுகிறது. தற்போது ஆசிய அபிவிருத்தி வங்கியானது, பாரிய முதலீட்டுத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களில் நீர் விநியோகத்திற்காக பெரும் நிதியை செலவு செய்கின்றது. இதில் கிளிநொச்சி யாழ். நீர் விநியோகத் திட்டத்தின்கீழ் (இரணைமடு) ஒரு நாளைக்கு 27 ஆயிரத்து 500 மீற்றர் கீயுப் குடி தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 88 ஆயிரத்து 500 மீற்றர் கீயுப் குடிதண்ணீர் ஒருநாளைக்கு யாழ். கிளிநொச்சி நீர் விநியோகத்திற்கு முழுமையாக தேவையாக உள்ளது. மிகுதியான 61 ஆயிரம் மீற்றர் கீயுப் குடிதண்ணீரை நிலத்தடி நீரை பாதுகாத்து வழங்க உத்தேசித்துள்ளோம். இதற்காக குறைந்தது 40 வருடங்கள் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை போராட வேண்டியுள்ளது. இதேவேளை, இரணைமடுத் நீர்த் திட்டத்தை 2 அடி உயரம் உயர்த்தி தேவையான நீரை தேக்கி, வான்பாயும் வாய்க் கால் தொகுதி, பாரிய கடவை பாலம், திருவையாறு லிப்ற் விவசாய நீர்ப்பாசன திட்டம் என்பவற்றை விரைவில் புனரமைத்து கொடுக்கவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக