
யாழ் மக்கள் உட்பட இலங்கை மக்கள் அனைவருடனும் இலங்கை அரசாங்கத்துடனும் அமெரிக்க அரசாங்கம் இணைந்து செயற்படும் என தெற்காசியாவுக்கான அமெரிக்க வர்த்தக அமைப்பின் பிரதிநிதி மைக்கல் மெலன் டிலானி தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தலைமையில் அமெரிக்க வர்த்தக குழுவினர் இன்றுகாலை யாழ்ப்பாணம் சென்றடைந்தனர். யாழ்ப்பாண பொது நூலகத்தில் கேட்போர் கூடத்தில் இவர்களுக்கான வரவேற்புக் கூட்டம் நடைபெற்றது. வடமாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவும் கலந்து கொண்டிருந்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய மைக்கல் மெலன் டிலானி, இலங்கை ஒரு பாரிய அபிவிருத்தி இலக்கை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. அதன் வெற்றிக்கு அமெரி;க்க அரசாங்கம் கைகொடுக்கும். இன்றைய கடின உழைப்பே நாளைய இளம் சந்ததியருக்கு நல்ல எதிர்காலத்தைத் தேடித்தரும். இந்த அடிப்படையில்தான் இலங்கை அரசாங்கம் வடக்கில் பாரிய முயற்சிகளில் இறங்கியூள்ளதென்பதை யாழ் மக்களுக்கு ஒரு நல்ல தகவலாக வழங்க விரும்புகிறேன். வடக்கில் தெரிவுசெய்யப்பட்டுள்ள இடங்களில் 30 நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைக்க முன்வந்துள்ளன. இதன்காரணமாக பல்லாயிரக் கணக்கான மக்கள் தொழில் வாய்ப்பு பெறுவர். நாட்டின் பொருளாதாரமும் துரிதமாக வளரும் என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக