
அம்பாறை மாவட்டம் கல்முனையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் ஒருவர் கொலைசெய்யப்பட்டது தொடர்பாக இரு இளைஞர்களுக்கு கல்முனை மேல்நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. கல்முனைக்குடியில் கடந்த 2007,07,06ம் திகதி கல்முனைக்குடியைச் சேர்ந்த முகம்மட் யூசுப் முகம்மட் பரீட் என்ற இளைஞர் கொலைசெய்யப்பட்டது தொடர்பாக மூன்றுபேருக்கு எதிராக கல்முனை மஜிஸ்திரேட் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது. இவ்வழக்கு தீர்ப்புக்காக கல்முனை மேல்நீதிமன்றிற்கு மாற்றப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தவேளையில் நேற்று கல்முனை மேல்நீதிமன்ற நீதிபதி விஸ்வலிங்கம் சந்திரமணி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றின் மின்விளக்குகள், மின்விசிறிகள் அணைக்கப்பட்டு எல்லோரும் எழுந்து நின்று 2ம், 3ம் எதிரிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இதன் முதலாவது எதிரி மன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கல்முனைக்குடியைச் சேர்ந்த முகம்மது அம்ஜத் (வயது 27) சாய்ந்தமருதைச் சேர்ந்த பஸ்மிர் (வயது 25) ஆகிய இருவருக்குமே தூக்குத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக