வியாழன், 14 அக்டோபர், 2010

இலங்கைக்காக முதலாவது தங்கப் பதக்கத்தை வென்ற மஞ்சு வன்னியாராச்சிக்கு ஜனாதிபதி வாழ்த்து..!

இந்தியா புதுடில்லியில் நடைபெற்றுவரும் பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் இலங்கைக்காக முதலாவது தங்கப் பதக்கத்தை வென்ற மஞ்சு வன்னியாராச்சிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக வாழ்த்துத் தெரிவித்துள்ளார். புதுடில்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக இந்த வாழ்த்துச் செய்தி தெரிவிக்கப்பட்டதாக தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல தெரிவித்துள்ளார். 56 கிலோ கிராம் எடைப்பிரிவூ குத்துச் சண்டைப் போட்டியில் இலங்கை சார்பில் பங்குப்பற்றிய மஞ்சு வன்னியாராச்சி இறுதிப் போட்டியில் தங்கக்பதகக்தை வென்றார். குத்துச்சண்டை போட்டியில் 72 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு இந்த தங்கப் பதக்கம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. 72 உலக நாடுகள் போட்டியிட்ட பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு மஞ்சு வன்னியாராச்சி தங்கப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக