திங்கள், 4 அக்டோபர், 2010

உலகத்தின் உயரமான மனிதரும் குள்ளமான மனிதரும் இலங்கைக்கு விஜயம்..!

உலகத்தின் உயரமான மனிதரும் குள்ளமான மனிதரும் இலங்கைக்கு விஜயம்- உலகத்தின் உயரமான மனிதரும் குள்ளமான மனிதரும் நேற்று முன்தினம் இரவு அவசரமாக இலங்கை வந்திருந்தனர். மலேஷியாவின் சுதந்திரதின நிகழ்வுகளில் விசேட விருத்தினர்களாக பங்குபற்றிய பின்னர் தமது சொந்த நாட்டுக்குச் செல்லும் வழியிலேயே அவர்கள் இலங்கை வந்திருந்தனர். இவர்கள் இருவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாவர். உலகில் உயரமான மனிதரான ஹக் நவாஸ் 7 அடி 8 அங்குலம் உயரமானவர். அவருக்கு 2 சகோதரர்களும் இரு சகோதரிகளும் உள்ளனர். இவரது சகோதர சகோதரிகள் அனைவரும் சாதாரண உயரமுடையவர்கள். பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த பஹபூரை வசிப்பிடமாகக் கொண்ட இவர், காலை உணவாக 16 ரொட்டிகள் 12 முட்டைகள் 4 லீட்டர் பாலையும் பகல் மற்றும் இரவு உணவாக 15 ரொட்டிகள் 3 கிலோ, மாட்டி றைச்சி அல்லது கோழி இறைச்சியையும் உண்பதாக கூறுகிறார். அத்துடன் மணித்தியாலத்துக்கு ஒருமுறை முன்பு பசியெடுப்பதன் காரணமாக சிற்றுண்டிகளை உண்பதாகவும் கூறுகிறார். 24 வயதுடைய பிரமச்சாரியான இவர், 6அடிக்கு மேற்பட்ட எந்தவொரு நாட்டையும் சேர்ந்த யுவதியை திருமணம் செய்ய விரும்புவதாக கூறுகிறார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பேச விரும்புவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். அதேவேளை உலகின் குள்ளமான மனிதரான அலி சமானின் உயரம் வெறுமனே 39 அங்குலம் மாத்திரமே (3 அடி 3 அங்குலம்). 48 வயதான இவர் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர். இவரது மனைவியின் உயரம் 5 அடியாகும். இவருக்கு 16, 11 மற்றும் 6 வயதுடைய மூன்று மகள்மார் உள்ளனர். மூத்த மகளின் உயரம் 34 அங்குலம் ஆகும். பாகிஸ்தானிய தொலைக்காட்சியில் நடிகராகவும் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்துவராகவும் இவர் பணி புரிகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக