வெள்ளி, 1 அக்டோபர், 2010
சாவகச்சேரியில் வீட்டில் இருந்த பெண்ணை ஆயுதமுனையில் அச்சுறுத்தி பல லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளை..!!
வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை ஆயுதமுனையில் அச்சுறுத்தி பலலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. கடந்த 28ம் திகதி காலை 9மணியளவில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி, மட்டுவில் தெற்கில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கணவன் வெளியில் சென்றவேளை வீட்டினுள் நுளைந்த இனந்தெரியாத இருவர் ஆயுதமுனையில் தனிமையில் இருந்த பெண்னை அச்சுறுத்தி நகைகளை அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். நீளக் காட்சட்டை அணிந்திருந்த அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர் என்றும் மேலும் துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்தியே நகைகளைக் கொள்ளையடித்தனர். என்றும் தெரிவிக்கப்படுகிறது. தாங்கள் படையினர் என்றும் வீட்டைச் சோதனையிட வேண்டும் என அவர்கள் அந்தப் பெண்ணை அச்சுறுத்தினர் என்றும் கூறப்படுகிறது. தாலிக்கொடி மற்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணமும் கொள்ளையிடப்பட்டதாக சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக