ஞாயிறு, 24 அக்டோபர், 2010

முக்கிய நபர்களுக்கான பாதுகாப்பு பெட்ரிகா ஜென்சுக்கு வழங்கப்பட்டது..!

தனக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக சண்டேலீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பெட்ரிகா ஜென்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பெட்ரிகா ஜென்ஸிடம் கேட்டபோது, கடந்தவாரத்தில் பிரதான இணையத்தளங்கள் இரண்டில் தன்னைக்கொலை செய்வதற்கான திட்டங்கள் இருப்பதாக செய்திகளை வெளியிட்டதை அடுத்து சண்டேலீடர் பத்திரிகையின் உரிமையாளர் லால் விக்ரமதுங்கவினால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸ்மா அதிபர் தனக்கு இந்தப் பாதுகாப்பை வழங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் தனது வாகனத்திற்குப் பின்னால் செல்லும் வகையில் பாதுகாப்பு வாகனமொன்று தமக்கு வழங்கப்பட்டிருப்பதாக ஜென்ஸ் குறிப்பிட்டுள்ளார். டயலொக் ரி.வி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொண்ட சந்தேகத்திற்கிடமான இருவர், இரண்டு முறை தனது வீட்டிற்குள் நுழைய முயற்சித்ததாகவும் இதுகுறித்து டயலொக் நிறுவனத்திடம் கேட்டபோது, அவ்வாறான நபர்கள் தமது நிறுவனத்தில் பணியாற்றவில்லை எனத் தெரிவித்ததாகவும் ஜென்ஸ் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக