திங்கள், 4 அக்டோபர், 2010
சரத் பொன்சேகாவிற்கு பதிலாக சிறைத்தண்டனை அனுபவிக்கத் தயார்-கோட்டே நாக விஹாரை பீடாதிபதி..!
ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவிற்கு பதிலாக சிறைத்தண்டனை அனுபவிக்கத் தயார் என கோட்டே நாக விஹாரையின் பீடாதிபதி மாதுலுவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நூறு பௌத்த பிக்குகளுடன் சிறைக்குச் செல்லத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மைக்கால இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் துரதிஷ்டவசமான சம்பவம் இதுவென அவர் தெரிவித்துள்ளார். இராணுவத் தளவாட கொடுக்கல் வாங்கல்களின்போது மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக 30மாத கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்துவரும் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை ஐக்கிய படுத்திய இராணுவத் தளபதியை விடுவிப்பதற்காக எந்தவொரு எல்லைக்கும் செல்லத் தயங்கப் போவதில்லை என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்காக தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக