
அனர்த்த முகமைத்துவ மத்திய நிலையம் இன்று புத்தளம் ஆலங்குடா பீ முகாமினை மையமாகக் கொண்டு சுனாமி எச்சரிக்கை வேலைத்திட்டத்தை நடத்தியது.மாலை 3.36 மணிக்கு சுனாமி அனர்த்த எச்சரிக்கை மணி எழுப்பப்பட்டதும் பள்ளி வாசல்களில் ஒலிபெருக்கி மூலமும்,ஆலயங்களில் மணி ஒலிக்கச் செய்தும் மக்களை விழிப்படையச் செய்து அவர்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன்,பொலீஸார் மற்றும் கடற்படையினர்,அனர்த்த முகாமைத்துவ மையத்தின் அதிகாரிகள் பிரசன்னமாகி மக்களை பாதுகாப்பாக எவ்வித விபத்துக்களும் இடம் பெறாதவாறு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்களது விபரங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர்,முன்னெச்சரிக்கை திட்டம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டன.புத்தளம் சஹீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக