மன்னார்மாவட்டத்தில் மாந்தைமேற்கு பிரதேச செயலகப் பிரிவில் காக்கையன்குளம் கிராமத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு இடம் பெயர்ந்த குடும்பங்களில் 51 குடும்பங்கள் நேற்று மீளக்குடியேறியுள்ளனர். இவ்வாறு மீள்குடியேறியுள்ள மக்களின் தேவைகள் குறித்து கண்டறியவென வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹ_னைஸ் பாருக் ஆகியோர் அங்கு விஜயம் செய்துள்ளனர் மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவில் இரனைஇலுப்பங்குளம், அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் அங்கு தங்கு வைக்கப்பட்டுள்ள இலுப்கைகுளம், செக்கட்டிகுளம், மண்கிட்டி, பூசாரியார்குளம் மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியதுடன், அவர்களது தேவைகள் குறித்துத உடன் நடவடிக்கையெடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். தற்போது இரணைஇலுப்பைக்குளம் பாடசாலையில் 100 குடும்பங்களை சேரந்த 359 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் ராஜரட்ணம் தெரிவித்தார். இப்பாடசாலையில் 91 மாணவர்கள் தற்போது கல்வி பயிலுவதாகவும் அவர் மேலும் கூறினார். மாணவர்களின் கற்றலுக்கு தேவையான உபகரணங்களுக்கான தட்டுப்பாடுகள் குறித்த கவனம் செலுத்துமாறு அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள்விடுத்தார். அதே வேளை காக்கையன்குளம் மதீனா நகருக்கு விஜயம் செய்த அமைச்சர், அம்மக்களது வாழ்வாதார மேம்பாடுகளுக்கான திட்டங்கள் குறித்து கேட்டறிந்து கொண்டார். தற்போது விவசாய செயற்பாடுகளுக்காக 5 குளங்களை உடன் புனரமைப்பு செய்வதற்கான பணிப்புரையினை பிரதேச செயலாருக்கவழங்கினார்.அதனடிப்படையில், காக்கையன்குளம், துவரங்குளம்,வெளிக்குளம், சின்னரசன்குளம், உவர்க்குளம் என்பன புனரமைப்பு செய்யப்படவுள்ளது. இக்கிராமத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு 265 குடும்பங்கள் வெளியேறிய நிலையில் தற்போது அக்குடும்பங்களின் எண்ணிக்கை 1200 ஆக காணப்படுவதால் இடப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது குறித்து மீளக்குடியமர்ந்துள்ள மக்கள் எடுத்துக் கூறினர். சுயதொழில் ஊக்குவிப்பு திட்டத்தின் முதற்கட்டமாக ஜந்து கிராமங்களை சேர்ந்த 300 குடும்பங்களுக்கு மேட்டு நில மிளகாய் பயிர்செய்கைக்கான தண்ணீர் இயந்திரம்,விதை மற்றும் பசளைகளை இலவசமாக பெற்றுக் கொடுக்கும் பணிகளை துரிதமாக தமது அமைச்சின் மூலம் ஆரமப்பிக்கவுள்ளதாக அமைச்சர் கூறினார். பாலம்பிட்டி, பெரியமடு, தட்சனாமருதமடு, பாலபெருமால்கட்டு, பாலையடி புதுக்குளம் கிராமங்களிலேயே இந்த பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதனையடுத்து மாந்தை மேற்கு மற்றும் மடு பிரதேச செயலகப் பிரவில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராயம் கூட்டம் அமைச்சர் றிசாத் பதியுதீன், வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரால் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோரரது தலைமையில் அடம்பன் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது. போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஹ_னைஸ்.பாருக், செல்வம் அடைக்கலநாதன், வினோனோதரலிங்கம், சிவசக்தி ஆனந்தன் உட்பட அரச அதிபர் நீக்கலா பிள்ளை பிரதேச செயலாளர்கள், தினைக்களங்களி;ன தலைவர்கள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர். மீள்குடியேறியுள்ள மக்களின் பல்வேறு தேவைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது, மின்சாரம், பாதை, வீடமைப்பு திட்டங்கள் குறித்து பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக