ஞாயிறு, 10 அக்டோபர், 2010

சரத் பொன்சேகாவிற்கு விதிக்கப்பட்ட தண்டனை கண்டிக்கப்பட வேண்டியது-கனேடிய தமிழ் காங்கிரஸ்..!

ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவிற்கு இலங்கை அரசாங்கம் விதித்த தண்டனை கண்டிக்கப்பட வேண்டியதென கனேடிய தமிழ் காங்கிரஸின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்துள்ளார். இராணுவ ஜெனரல் என்ற ரீதியில் சரத் பொன்சேகாவுடன் தமக்கு முரண்பாடு காணப்பட்ட போதிலும், இலங்கை அரசாங்கம் அவருக்கு விதித்த தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல்வாதி என்ற வகையில் சரத் பொன்சேகாவின் கருத்துக்களை தாம் ஏற்றுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான வகையில் சரத் பொன்சேகா தண்டிக்கப்பட்டுள்ளார். இத்தண்டனை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. தமிழர்கள் உள்ளிட்ட எதிர்த்தரப்பினர்மீது இலங்கை அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளதென்பதனை சரத் பொன்சேகாவிற்கு விதிக்கப்பட்ட தண்டனையின் மூலம் விளங்கிக்கொள்ள முடியும். தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களை விடுதலை செய்யுமாறு மட்டுமன்றி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறும் தமிழ் புலம்பெயர் மக்கள் உலகம் முழுவதிலும் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. சரத் பொன்சேகாவிற்காக சர்வதேச அமைப்புக்களிடம் புலம்பெயர் தமிழர்கள் முறைப்பாடு செய்வார்கள். இந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்த தெற்கு சமூகம் விழித்துக் கொள்ளாவிட்டால் இலங்கை பாரிய பின்னடைவினை எதிர்நோக்குவதனை தடுக்க முடியாது. மனித உரிமைகளுக்கோ அல்லது ஜனநாயகத்திற்கே இலங்கையில் மதிப்பளிக்கப்படுவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக